‘விடுதலைப்போரில் தமிழகம்’ அலங்கார ஊர்திகளை பார்வையிட மக்களுக்கு மேலும் காலஅவகாசம் : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
23 February 2022, 11:43 am

சென்னை கடற்கரை சாலையில்‌ காட்சிப்படுத்தப்பட்டுள்ள விடுதலைப்போரில்‌ தமிழகம்‌ என்ற மூன்று அலங்கார ஊர்திகள்‌ பொதுமக்கள்‌ பார்வைக்கு மேலும்‌ ஒரு வார காலம்‌ நீட்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- சென்னையில்‌ 26.01.2022 அன்று நடைபெற்ற குடியரசு நாள்‌ விழாவில்‌ செய்தித்‌ துறை சார்பில்‌ விடுதலைப்‌ போரில்‌ தமிழகத்தின்‌ பங்களிப்பை டவளிப்படுத்தும்‌ வகையில்‌ தமிழக சுதந்திரப்‌ போராட்ட வீரர்களின்‌ வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும்‌ மூன்று அலங்கார ஊர்திகளின்‌ அணிவகுப்பு நடைபெற்றது. அதனைத்‌ தொடர்ந்து மாநிலம்‌ முழுவதும்‌ உள்ள மக்கள்‌ கண்டுகளிக்கின்ற வகையில்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ 26.01.2022 அன்று அந்த ஊர்திகளை சென்னை, தீவுத்திடலில்‌ கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்‌.

தமிழ்நாட்டின்‌ பெரும்பான்மையான மாவட்ட மக்களிடையே சென்று மிகுந்த வவேற்பினை பெற்றுள்ள இந்த அலங்கார ஊர்திகள்‌ சென்னை மாநகர மக்கள்‌ கண்டு களித்திடும்‌ வகையில்‌ இசென்னை மெரினா கடற்கரை இணைப்புச்‌ சாலையில்‌ விவேகானந்தர்‌ இல்லம்‌ எதிரே பொதுமக்களின்‌ பார்வைக்கு 20.02.2022 முதல்‌ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நாள்தோறும்‌ பொதுமக்கள்‌, பள்ளி மாணவ, மாணவியர்கள்‌ மற்றும்‌ சுற்றுலாப்‌ பயணிகளும்‌ பெரும்திரளாக இந்த அலங்கார ஊர்திகளை பார்வையிட்டு வருகின்றனர்‌. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ அவர்கள்‌ 24.2.2022 அன்று இந்த ஊர்திகளைப்‌ பார்வையிட்டு அங்கு பெரும்திரளாக கூடியிருந்த மாணவச்‌ செல்வங்களுடன்‌ கலந்துரையாடினார்‌. சமூக வலைதளங்கள்‌ மூலம்‌ பொதுமக்கள்‌, மாணவர்கள்‌ உட்பட பல்வேறு தரப்பினர்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களுக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று, மேலும்‌ ஒரு வார காலத்திற்கு அவ்விடத்தில்‌ இந்த அலங்கார ஊர்திகள்‌ காட்சிப்படுத்தப்படும்‌ என முதலமைச்சர்‌ அறிவித்துள்ளார்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது‌.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!