‘நாங்க என்ன சாப்பிடனும்னு உத்தரவு போட இந்த அரசு யார்..?’ கிளம்பிய எதிர்ப்பு… நிபந்தனையை வாபஸ் பெற்ற தமிழக அரசு..!!

Author: Babu Lakshmanan
25 March 2022, 1:30 pm
Quick Share

சென்னை : அரசுப் பேருந்துகள் சைவ உணவகங்களில் மட்டும்தான் நிறுத்த வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அது வாபஸ் பெறப்பட்டது.

வெளியூர்களுக்கு அரசுப் பேருந்துகள் செல்லும் வழிகளில் உணவகத்தில் நிறுத்தம் செய்ய ஓராண்டுக்கான உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதன்படி, சைவ உணவு மட்டுமே தயார் செய்ய வேண்டும் என்றும், அசைவ உணவுகளை தயாரிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசு பேருந்து நின்று செல்லும் மோட்டல்களில் சைவ உணவுகளுக்கு மட்டுமே அனுமதி'-  விரிவான தகவல் | Only vegetarian hotels are allowed in government bus stop  motels ...

தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. எந்த உணவை நாங்கள் சாப்பிட வேண்டும் என்பதை அரசு முடிவு செய்ய முடியாது..? என்று கருத்துக்களை பொதுமக்கள் தெரிவித்து வந்தன.

மேலும், இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தை, திராவிடக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இந்த விவகாரத்தில் வாய் திறக்குமா..? என்றும் கேள்வி எழுப்பிருந்தார்.

அதாவது, அவர் விடுத்த டுவிட்டர் பதிவில், “அரசுப் பேருந்துகள் செல்லும் வழியில் சைவ உணவு விற்பனை செய்யும் உணவகங்களுக்கு மட்டுமே உரிமம் : தமிழக அரசு உத்தரவு.
‘நான் என்ன சாப்பிட வேண்டும் என்று உத்தரவிடுவதற்கு அரசு யார்?’ என்று கேட்ட முற்போக்குகளும், ‘மாட்டுக்கறி என் உரிமை’ என்று முழங்கிய கம்மிகளும், ‘எங்கள் உணவு எங்கள் உரிமை’ என்று பொங்கிய விடுதலை சிறுத்தைகளும், ‘மாட்டிறைச்சி திருவிழா’ நடத்திய அதிமேதாவிகளும், ‘பண்பாட்டு ஒடுக்குமுறை’ என்று கூவிய திராவிடர் கழக வீரமணியும் இந்த உத்தரவை எதிர்த்து குரல் கொடுப்பார்களா? அல்லது இருட்டறைக்குள் சென்று ஓடி ஒளிந்து கொள்வார்களா?,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

TN Secretariat- Updatenews360

இந்த நிலையில், கடும் எதிர்ப்பு கிளம்பியதால், நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும் என்ற வார்த்தைகள் நீக்கம் செய்யப்பட்டு, மறு அறிவிப்பை போக்கவரத்துக்கழகம் வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். பயணிகள் அருந்துவதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட வேண்டும். நெடுஞ்சாலையோர உணவகங்களில் கழிப்பிட வசதி, கட்டாயம் இலவசமாக இருக்க வேண்டும். உணவகம் கட்டாயம் சாலையின் இடதுபுறமாக மட்டுமே அமைந்திருக்க வேண்டும், என குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 926

0

0