பரந்தூர் விமான நிலையம் அவசியம்.. செங்கல்பட்டுதான் சரியான இடம் ; மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழக அரசு திட்டவட்ட அறிவிப்பு

Author: Babu Lakshmanan
19 October 2022, 12:03 pm
Quick Share

சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பரந்தூர் விமான நிலைய அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் சரியானது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் கிராமத்தை மையமாக வைத்து 13 கிராமங்களில், விமான நிலையம் அமைப்பதற்கு நில எடுப்புக்காக குடியிருப்பு பகுதிகள் அகற்றப்பட உள்ளதாக வந்த தகவலை அடுத்து 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

இந்த விமான நிலையம் அமைப்பதினால் விவசாய நிலங்களும், நீர்நிலைகளும் பாதிக்கப்படுவதாகக் கூறி 80 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். ஏகனாபுரத்தை மையமாக வைத்து பல்வேறு போராட்டங்களை 13 கிராம மக்கள் நடத்தி வரும் நிலையில், விமான நிலைய திட்டத்தை கைவிடக்கோரி தமிழக அரசிடமும் அவர்கள் மனு அளித்துள்ளனர்.

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக இதுவரையில் எந்த பதிலையும் தமிழக அரசு வெளியிடாத நிலையில், இது தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது :- வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பரந்தூர் விமான நிலையம் அவசியமானதாகும். காஞ்சிபுரம், திருவள்ளூர் ஏரிகள் நிறைந்த மாவட்டமாகும். செங்கல்பட்டில்தான் புதிய விமான நிலையத்திற்கு ஏற்ப நிலம் உள்ளது. நிலப்பரப்பு, தொழில்நுட்ப காரணங்களை மனதில் கொண்டு பரந்தூர் பகுதி, புதிய விமான நிலையம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் தேவையை கருத்தில் கொண்டு சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து எதிர்காலத்தில் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படும். பெருநகரங்களில், ஏன் தற்போது உள்ள விமான நிலையங்களில் இருந்து புதிய விமான நிலையங்கள் தொலைவில் அமைகின்றன?. ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகள் வருங்காலங்களில் கையாளும் விதமாக பரந்தூர் விமான நிலையம் அமையும்.

விமான சரக்கு முனையம் என பல்வேறு வளர்ச்சிகளை கொண்டதாக பரந்தூர் விமான நிலையம் இருக்கும், எனக் கூறினார்.

Views: - 487

0

0