தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு… கொளுத்தும் வெயிலுக்கு கொஞ்சம் ரெஸ்ட்டு…!!

Author: Babu Lakshmanan
9 April 2022, 9:03 am
Rain Warning - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- இலங்கை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், அதேவேளையில், நிலவும் வெப்ப சலனம் காரணமாகவும், தமிழகத்தின் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்சம் 35 டிகிரிசெல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 458

0

0