‘கணபதி பப்பா மோரியா’… களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் ; அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்..!

Author: Babu Lakshmanan
18 September 2023, 8:23 am

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்களிடையே கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்து பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்களால் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா களையிழந்து காணப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் பல்வேறு விநாயகர் கோவில்களில் அதிகாலையிலேயே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பக்தர்கள் அதிகாலை முதல் விநாயகர் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் அதிகாலையிலேயே அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல, புகழ்பெற்ற புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் காலையில் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார கோலத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட நிலையில், பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!