“தாரங் சக்தி”தமிழகம் வர இருக்கும் 10 நாடுகளின் விமானப் படை: கோவைக்கு கிடைத்த பெருமை…!!

Author: Sudha
5 August 2024, 6:51 pm

கோவை மாவட்டம் சூலூரில் இந்திய விமானப்படை தளம் அமைந்துள்ளது. இங்கு நாளை முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை ‘தாரங் சக்தி’ பயிற்சியை நடத்த விமானப்படை திட்டமிட்டுள்ளது. பயிற்சியில் பங்கேற்க மொத்தம் 51 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட 10 நாடுகளின் விமானப்படை விமானங்கள் பயிற்சியில் பங்கேற்க உள்ளன. 2ம் கட்டமாக, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவுக்கும் இந்த பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா வரவில்லை.

“தாரங் சக்தி” பயிற்சி உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் நிர்வாகத் திறமையை வெளிப்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. பயிற்சி நடக்கும் போது சூலூர் மற்றும் ஜோத்பூர் ஆகிய இரு இடங்களில் ‘மேட் இன் இந்தியா’ கண்காட்சியும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!