தமிழகத்தை அடுத்தடுத்து உலுக்கும் பலாத்கார சம்பவங்கள்… வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண் கூட்டு பலாத்காரம் : தஞ்சையில் பயங்கரம்…!!

Author: Babu Lakshmanan
29 April 2022, 11:53 am
Quick Share

தஞ்சை அருகே வேலை முடிந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல பணி முடித்து விட்டு தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரை வழிமறித்த பக்கத்து ஊரான மேட்டுபட்டியை சேர்ந்த கொடிஅரசன் என்ற இளைஞர், பெண்ணை அழைத்துச் சென்று வீட்டில் விட்டு விடுவதாகக் கூறியுள்ளார். இதனை நம்பிய அவரும் கொடி அரசனுடன் வாகனத்தில் சென்றுள்ளார்.

ஆனால், அந்த இளம்பெண்ணை ஏமாற்றி, அருகே இருந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, கொடி அரசன் தனது நண்பர்களான தமிழரசன், சுகுமாரன், கண்ணன் உள்பட 5 பேருடன் இணைந்து கூட்டு பாலியல் செய்துள்ளனர்.

இதனால், பாதிக்கப்பட்ட பெண் தஞ்சை வல்லம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வல்லம் டிஎஸ்பி பிருந்தா விசாரணை செய்து, கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. விருதுநகரில் 22 வயது இளம்பெண்ணும், வேலூரில் பெண் மருத்துவரும், அம்பத்தூர் 13 வயது சிறுமியையும் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவங்கள் இதற்கு உதாரணமாகும். எனவே, பலாத்கார குற்றங்களை தடுத்து நிறுத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Views: - 697

0

0