கஞ்சா போதையில் இளசுகள் அலப்பறை… சாலையோர வியாபாரிகளை சரமாரியாக தாக்கிய புள்ளிங்கோ… அதிர்ச்சி வீடியோ..!!

Author: Babu Lakshmanan
4 July 2022, 1:36 pm
Quick Share

தஞ்சாவூரில் கஞ்சா போதையில் புள்ளிங்கோ சிலர், சாலையோர வியாபாரிகளை அடித்து ரவுசு செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. பள்ளி சிறுவர்கள் முதல் கல்லுாரி இளைஞர்கள் வரை குறிவைத்து கஞ்சா விற்பனை கும்பல் படுஜோராக தொழிலில் கொடிக்காட்டி பறந்து வருகின்றனர்.

கஞ்சா போதைக்கு அடிமையான புள்ளிங்கோ சிறுவர்கள், இளைஞர்கள் செயின் பறிப்பு, திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா செல்லும் வழியில் நேற்று மாலை சாலையோரத்தில் கடை வைத்திருந்த பாணி புரி கடைக்காரரை அடித்து தாக்கியுள்ளனர். அவர் பயத்தில் அலறி ஓடினார். அதன் பிறகு அங்கிருந்த பழக்கடையில் பழங்களை எடுத்து வியாபாரி மீது வீசி ரகளை செய்தனர். இதனை அப்பகுதியில் சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

Views: - 222

0

0