அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தி குறித்து செல்லூர் ராஜு பதிவு : மாணிக்கம் தாகூர் ரிப்ளை!

Author: Udayachandran RadhaKrishnan
21 May 2024, 6:56 pm
rahul
Quick Share

அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தி குறித்து செல்லூர் ராஜு பதிவு : மாணிக்கம் தாகூர் ரிப்ளை!

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எப்படியாவது அதிமுக கூட்டணிக்கு இழுக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், ஏதும் கைகொடுக்கவில்லை. இதனால், காங்கிரஸ் பற்றி விமர்சிப்பதை அதிமுக குறைத்துக் கொண்டது என்றே சொல்லலாம்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் வீடியோவை பகிர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ‘நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் !!!’ எனக் X தளத்தில் பதிவு போட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளை புகழ்ந்து பேசக் கூடாது என்று இருக்கும் நிலையில், செல்லூர் ராஜுவின் இந்தப் பதிவு அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் அதிமுகவின் தலைமைக்கு ஏதேனும் சொல்லவதற்காக இப்படி செய்தாரா..? அல்லது எதார்த்தமாக இப்படி பதிவிட்டாரா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க: இந்த அணையில் மட்டும் இனி மீன்கள் வாழ முடியாது.. செத்து மிதந்த மீன்கள் : அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை!!

இதனிடையே, செல்லூர் ராஜூவின் இந்த பதிவுக்கு விருதுநகர் காங்கிரஸ் எம்பியும், தற்போதைய வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் நன்றியை தெரிவித்துள்ளார்.

Views: - 145

0

0