தமிழகத்தில்தான் அப்படி நடந்துச்சு.. இங்க அத பண்ணாதீங்க : தேநீர் விருந்து நிகழ்வு குறித்து ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2022, 9:09 pm
Tamilisai Advice -Updatenews360
Quick Share

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அளிக்கும் தேநீர் விருந்தை திமுக, காங்கிரஸ் கட்சிகள் புறக்கணித்துள்ளது.

தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தில் பங்கேற்கமாட்டோம் என தெரிவித்தனர்.

ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டனர். திமுக அரசு பங்கேற்காதது குறித்தது எதிர்ப்பும், ஆதரவான விமர்சனங்கள் பறந்தன.

இந்த நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அளிக்கும் தேநீர் விருந்தை திமுக, காங்கிரஸ் கட்சிகள் புறக்கணித்துள்ளது. அதிமுக, பாஜக கட்சிகள் கலந்து கொண்டுள்ளது. இந்த தேனீர் விருந்தில் முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தேநீர் விருந்து நிகழ்வை அரசியலாக்க வேண்டாம், எல்லாவற்றிலும் அரசியலை புகுத்தினால் யாரும் நல்லுறவுடன் இருக்க முடியாது என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். நான் சூப்பராக செயல்படுகிறேன் என புதுச்சேரியில் உள்ள யாரைக் கேட்டாலும் சொல்வார்கள்என கூறினார்.

Views: - 1035

0

0