தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சரிப்பட்டு வராது.. திமுகவுக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் பேச்சால் பரபர!

Author: Udayachandran RadhaKrishnan
16 செப்டம்பர் 2024, 11:18 காலை
thiruma
Quick Share

முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா. மதுரை நெல் பேட்டை சந்திப்பில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : கோவை அன்னபூர்னா விவகாரம் குறித்த கேள்விக்கு, பாஜக தேர்தலுக்கு முன்னதாக தமிழர்கள், தமிழ் என பேசுவர்.

ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, இது போன்று தமிழர்களை அவமதிப்பர். எங்கள் பொது செயலாளர் எடப்பாடி இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை. மத வாத சக்தியாக பாஜக இருப்பதால், பாஜக வுடன் கூட்டணி இல்லை. திமுக வை தவிர வேறு எந்த கட்சியிடனும் கூட்டணியில் சேரலாம்.

அதிமுக, திமுக என. தமிழகத்தில் திராவிட கட்சிகள் தான் ஆட்சிக்கு வர முடியும். தமிழகத்தில் மது ஒழிப்பு மாநாடு மட்டும் அல்ல . அனைத்து போதை ஒழிப்பு மாநாடு நடத்த வேண்டியதுள்ளது. அந்த அளவுக்கு மது, போதை பொருட்களின் விற்பனை அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் அதிமுக , திமுக யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை நல் ஆட்சிக்கு அது சரிப்பட்டு வராது.

மேலும் படிக்க: தங்கும் விடுதியில் நடந்த உல்லாசம்.. உறவு முறை அண்ணன், தங்கையின் முறை தவறிய சகவாசத்தால் பிரிந்த உயிர்!

பல மாநிலங்கள் இதற்கு உதாரணமாக உள்ளது. முல்லை பெரியாறு அணையில், உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட அளவு உயர்த்த வேண்டும். இவ்வாறு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ , மது ரையில் பேட்டி அளித்தார்.

  • Nithyananda Ranjitha நித்யானந்தா உடன் தான் இருக்கிறேன்.. ரஞ்சிதா வெளியிட்ட பகீர் தகவல்!
  • Views: - 173

    0

    0