200 தோப்புக்கரணம் போட வைத்த தலைமையாசிரியை : நடக்க முடியாமல் தவித்த 50 பள்ளி மாணவிகளுக்கு சிகிச்சை!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2024, 1:38 pm

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜூ மாவட்டம் ரொம்ப சோடவரம் நகரில் அரசு கிரிஜன மாணவிகள் குருகுல பாடசாலை உள்ளது.

அந்த பாடசாலையில் சுமார் 200 மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். மாணவிகளில் சிலர் சரியாக படிக்காத நிலையில் அவர்கள் பள்ளி விதிகளை பின்பற்றாமல் இஷ்டம் போல் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே அந்த மாணவிகளை பள்ளியின் தலைமையாசிரியை தலா 200 தோப்புக்கரணம் போட செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: 5 கட்சி அமாவாசை… காலாவதியான பின்பு எம்எல்ஏ பதவி : தமிழக அரசியல்வாதிகளை விளாசிய ஹெச்.ராஜா!

ஒரே நேரத்தில் தொடர்ந்து 200 தோப்புக்கரணம் போட்ட மாணவிகளுக்கு கால் தசைகளில் பிடிப்பு ஏற்பட்டு அவர்களால் நடக்க இயலாத நிலை ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு விரைந்து வந்து இதுபோல் செய்யலாமா என்று தலைமை ஆசிரியை தட்டி கேட்டனர்.

மேலும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவிகளை ரொம்பசோடாவரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அங்கு அவர்கள் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?