தமிழகத்தில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 54 பேருக்கு தொற்று உறுதி…43வது நாளாக உயிரிழப்பு ‘ஜீரோ’..!!

Author: Rajesh
29 April 2022, 11:14 pm

சென்னை: தமிழகத்தில் நேற்று 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று பாதிப்பு 54 ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, இன்று புதிதாக 28 ஆண்கள், 26 பெண்கள் என மொத்தம் 54 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 35 பேர் உள்பட 9 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 29 மாவட்டங்களில் யாரும் புதிதாக பாதிக்கப்பட்டவில்லை. அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மட்டுமே கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளது.

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 13 பேர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து 43வது நாளாக உயிரிழப்பு இல்லை. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 35 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 337 பேரும், செங்கல்பட்டில் 56 பேரும் உள்பட 507 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?