அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு செக் வைத்த நீதிபதி.. முறைகேடு வழக்கில் திருப்பம் : விடுதலை செல்லாது என உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
26 February 2024, 11:45 am

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு செக் வைத்த நீதிபதி.. முறைகேடு வழக்கில் திருப்பம் : விடுதலை செல்லாது என உத்தரவு!

4வீட்டு வசதிவாரிய முறைகேடு வழக்கில், அமைச்சர் ஐ. பெரியசாமி மீதான புகாரை முறையாக ஒப்புதல் பெற்று முறையாக வழக்கை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐ. பெரியசாமி மீதான புகாரில், சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று தீர்ப்பளித்துள்ளார்.

ஆளுநரிடம் அனுமதி வாங்காமல் அவைத்தலைவரிடம் விசாரணை நடத்த அனுமதி வாங்கியதால், சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்துள்ளார்.

மேலும், மார்ச் 28ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ரூ.1 லட்சத்துக்கு பிணைத்தொகை செலுத்தவும் வழக்கை விசாரிக்கத் தொடங்கிய பிறகு நாள்தோறும் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை, மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பாதுகாவலராக வேலை செய்த காவல்துறை அதிகாரி கணேசனுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு முறைகேடாக ஒதுக்கியதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2012-ஆம் ஆண்டு அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பாக தற்போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகிக்கும் ஐ.பெரியசாமிக்கு எதிராக, கடந்த 2012-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் சிறப்பு நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்தது.

வழவழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!