முதலமைச்சருக்கு ஷாக் கொடுத்த எம்எல்ஏ… ஆளுங்கட்சி எம்எல்ஏ காங்கிரசில் இணைந்ததால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2024, 10:56 am
YSR
Quick Share

முதலமைச்சருக்கு ஷாக் கொடுத்த எம்எல்ஏ… ஆளுங்கட்சி எம்எல்ஏ காங்கிரசில் இணைந்ததால் பரபரப்பு!!

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் பூத்தலப்பட்டு தொகுதி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. எம்.எஸ். பாபுவிற்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு, முன்னாள் எம்.எல்.ஏ. சுனில் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதனால் அதிருப்தியில் இருந்த எம்.எஸ். பாபு கடப்பாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஒய்.எஸ். சர்மிளா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தார்.

இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட பாபுவுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 124

0

0