அடுத்த டார்கெட் சீமான்? ஸ்கெட்ச் போடும் திமுக.. குவியும் புகாரால் விரைவில் கைது?!!

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2024, 2:41 pm

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி அவர்கள் குறித்து மிகவும் கீழ்த்தரமாகவும் மக்களிடையே அவருடைய நற்பெயரை கெடுக்கும் விதமாகவும் தமிழ் திரைப்பட பாடல் ஒன்றை மாற்றி இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மறைந்த ஒரு நபரின் நட்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பேசுவது மிகப்பெரிய குற்றம் என்பதை தெரிந்தும் கள்ளத்தனம் செய்த காதகன் கருணாநிதி, சதிகாரன் கருணாநிதி, சண்டாளன் கருணாநிதி என்று மிகவும் கேவலமான சொற்களால் பொதுவெளியில் பாடியுள்ளார்.

இதை கண்டித்து சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான கனகவேல் பாண்டியன் இன்று மதுரை காவல்துறை ஆணையாளர் இடத்தில் புகார் மனு அளித்தார்.

ஏற்கனவே இதே பாடலை பாடி நாம் தமிழர் கட்சி பிரமுகர் சாட்டை துரைமுருகன் நேற்று காலை கைது செய்யப்பட்டு மாலையில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

தற்போது அதே பாடலை பாடிய சீமான், முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என சவால் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?