சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல் களம்.. பாஜகவுடன் இணையும் பிரபல நடிகரின் கட்சி? அதிர்ச்சியில் ஆளுங்கட்சி!!!

Author: Udayachandran RadhaKrishnan
9 December 2023, 12:11 pm

சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல் களம்.. பாஜகவுடன் இணையும் பிரபல நடிகரின் கட்சி? அதிர்ச்சியில் ஆளுங்கட்சி!!!

சமத்துவ மக்கள் கட்சியை பொறுத்தவரை, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டது. ஆனால், வரும் தேர்தலில் யாருடன் இணைந்து போட்டியிட போகிறது என்று தெரியவில்லை. எனினும், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டதால், சமகவில் உள்ள ஒருதரப்பினர் அதிர்ச்சி அடைந்து, அதிமுகவில் இணைந்துவிட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு, சமகவின் 17-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில், சரத்குமார் பேசியபோது, “16 வருஷமா இந்த இயக்கத்தை நடத்தியிருக்கிறோம். சமத்துவம் இருந்தால் மட்டுமே இந்த நாடும் முன்னேறும், நாமும் முன்னேறுவோம் என்ற அடிப்படையில் தான் சமத்துவ மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது.

2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கஷ்டமோ, நஷ்டமோ சமத்துவ மக்கள் கட்சி தனியாக போட்டியிட வேண்டும்… மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

அதேபோல, சில நாட்களுக்கு முன்பு, சரத்குமார் தந்த ஒரு பேட்டியில், “எம்பி தேர்தலைவிட சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்துதான் சமத்துவ மக்கள் கட்சி பணியாற்றி வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, எந்த தேர்தலிலும் சமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட விரும்புகிறது. அதிமுக கூட்டணியில் நாங்கள் இல்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை” என்று கூறியிருந்தார்.

அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று மீண்டும் சரத்குமார் உறுதியாக கூறியிருந்ததால், ஒருவேளை, திமுகவுடன் இந்த முறை கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதோ? என்ற சந்தேகம் நிலவியபடியே உள்ளது..

அதற்கேற்றவாறு, திமுகவையும் சரத்குமார் அவ்வளவாக விமர்சிக்காமலும் வருவதால், கூட்டணி குறித்த சந்தேகம் அதிகரித்தது. இதற்குநடுவில் திமுக நடத்திய மகளிர்தின விழாவில், ராதிகா சரத்குமார் பங்கேற்று பேசியிருந்தது, நிலவிவந்த சந்தேகத்தை மேலும் வலுவாக்கியது.

போதாக்குறைக்கு பாஜகவையும் சரத்குமார் கடுமையாக விமர்சித்திருந்தார். “இங்கிருக்கும் ஆட்சியாளர்களுக்கு சாதகமான அரசு கர்நாடகாவில் இருந்தாலும் தண்ணீர் தருவதாக இல்லை… ஒரு நாட்டுக்குள் இந்த பிரச்சினையை ஏன் தீர்க்க முடியவில்லை? இதில் மத்திய அரசு தலையிட்டு தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும்.. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிறார்களே.. அந்த ஒரே நாட்டில் இப்படியான பிரச்சினைகள் வருவது வேடிக்கையாக உள்ளது.

வரப்போகும் எம்பி தேர்தல் குறித்து வருகிற டிசம்பர் 9-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் நாங்கள் அறிவிப்போம். பாராளுமன்ற தேர்தல் எப்படியும், பண நாயகமாக தான் இருக்கும். 100 கோடி: எம்பி தேர்தலில் நின்றால் ரூ.100 கோடி வேண்டும் என்கிறார்கள்… சட்டசபை தேர்தல் என்றால் ரூ.25 கோடி வேண்டும் என்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா? என்று தெரியவில்லை என்று சாடியிருந்தார் சரத்குமார்.

ஆக, அதிமுகவுடனும் கூட்டணியில்லை.. பாஜகவையும் விமர்சித்து வரும்நிலையில், சமகவின் தேர்தல் முடிவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. எப்படி பார்த்தாலும், எம்பி தேர்தலில் சமக போட்டியிட வாய்ப்பிருக்காது என்றும், வரப்போகும் சட்டமன்ற தேர்தலையே எதிர்கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

அதேசமயம், எம்பி தேர்தலில் யாருக்கு ஆதரவை தரப்போகிறது? அதிமுகவும் இல்லை, பாஜகவும் இல்லை என்றால், அப்ப “அவங்களா”??? தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம்..

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!