ஆசை ஆசையாக அண்ணாமலையுடன் போட்டோ எடுத்த காவலர் : ஆக்ஷனில் இறங்கிய தமிழக காவல்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
29 September 2023, 8:52 pm
Police - Updatenews360
Quick Share

ஆசை ஆசையாக அண்ணாமலையுடன் போட்டோ எடுத்த காவலர் : ஆக்ஷனில் இறங்கிய தமிழக காவல்துறை!!

தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை உள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கும் முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் பாதயாத்திரையை தொடங்கி உள்ளார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த பாதயாத்திரை என்பது பாஜகவுக்கு கைக்கொடுக்கும் என அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் நம்புகின்றனர்.

கடந்த 27 ம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூரில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆளும் திமுக அரசை அவர் கடுமையான விமர்னசம் செய்தார். அதன்பிறகு அவர் ஊட்டிக்கு சென்று பாதயாத்திரையை மேற்கொண்டார். ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியிலிருந்து ஏடிசி நோக்கி தொண்டர்களுடன் அண்ணாமலை நடந்து சென்றார்.

இந்த வேளையில் ஊட்டி காஃபி ஹவுஸ் சர்க்கிள் பகுதியில் பணியில் இருந்து ‘ஹில் காப்’ பிரிவை சேர்ந்த காவலர் கணேசன், தனது சீருடையுடன் அண்ணாமலையுடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டார். இதுதொடர்பான போட்டோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

பணியில் இருந்தபோது அண்ணாமலையுடன் சேர்ந்து கணேசன் போட்டோ எடுத்து கொண்ட சம்பவம் விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில் தான் ஹில்காப் காவலரான கணேசன் தற்போது அதிரடியாக தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.

அதாவது தமிழக காவல்துறை சார்பில் மலை மாவட்டத்தில் போக்குவரத்தைச் சீரமைத்தல், சுற்றுலா பயணிகளுக்கு உதவும் பிரிவான ஹில்காப்-பில் இருந்து கணேசன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி கணேசன் தற்போது ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Views: - 275

0

0