ரூட்டு மாறுதே… அதிமுகவுக்கு பலம் கொடுத்த அரசியல் கட்சி : சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. அதிர்ச்சியில் திமுக கூட்டணி!!

Author: Udayachandran RadhaKrishnan
12 October 2023, 9:37 am

ரூட்டு மாறுதே… அதிமுகவுக்கு பலம் கொடுத்த அரசியல் கட்சி : சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. அதிர்ச்சியில் திமுக கூட்டணி!!

தமிழகத்தில் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்ய சொல்லி பல கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்சை சந்தித்து எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் நேற்று மாலை சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய முடிவுக்கு எஸ்டிபிஐ நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்தனர்.
மேலும், தமிழ்நாடு சிறைகளில் உள்ள நீண்டநாள் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து, அந்த கோரிக்கைக்கு வலுசேர்த்ததற்காக அதிமுகவுக்கு எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் நன்றி தெரிவித்தார்.

தமிழ்நாடு முஸ்லிம்களின் நீண்டநாள் கோரிக்கையான, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை நிறைவேறும் வகையில், அதிமுக தொடர்ந்து வலுவாக குரல் எழுப்பி ஆதரவு தர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

முன்னதாக எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், நீண்டநாள் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவர வேண்டும்.

மேலும், இக்கோரிக்கைக்கு சட்டமன்றத்தில் அழுத்தம் தரும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக அதிமுக, காங்கிரஸ், விசிக, பாமக, மதிமுக, தவாக உள்ளிட்ட கட்சிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!