‘போடா ம…று’ என திட்டிய அமைச்சர் பொன்முடி : போராடிய மக்கள் மத்தியில் ஆபாச வார்த்தையால் பேசிய வீடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 November 2022, 8:08 pm

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த சித்தலிங்கமடம் கிராமத்தில் கிராம எல்லை பிரித்து எடப்பாளையம் தனி ஊராட்சி வருவாய் சேர்ப்பதால் சித்தலிங்கமடம் அப்பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சித்தலிங்கமடம் ஆர்பாட்டம் நடக்கும் இடத்திற்கு உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில் சித்தலிங்கமடம் கிராமத்திலிருந்து எடப்பாளையம் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக பிரிக்கும் போது அந்தந்த கிராமத்திற்கு சொந்தமான நிலம் மற்றும் குடியிறுப்பு பகுதியை அதே கிராமத்திலேயே இருக்கும் படி பிரிக்கப்படும் என்று கூறினார்.

மேலும் சித்தலிங்கமடம் கிராமத்திற்கு நிழற்குடை, சுகாதார நிலையம் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார் இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முன்னதாக கிராம மக்கள் அமைச்சரை முற்றுகையிடும் போது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முற்றுகியட்ட மக்களில் ஒருவரை பார்த்து அறுவறுக்கத்தக்க வார்தையில் பேசினார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

ஏற்கனவே சர்ச்சையான பேச்சுக்களை பேசி திமுக அமைச்சர்கள் வரிசையாக சிக்கி வருகின்றனர். அரசு பேருந்தில் மகளிர் இலவச பயணம் குறித்து ஓசி என பேசிய அமைச்சர் பொன்முடி சர்ச்சையில் சிக்கிய நிலையிலல் மீண்டும் அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளது திமுக தலைமைக்கு தலைவலியை கொடுத்துள்ளது.

என்னை துன்புறுத்துவதுபோல் மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் செயல்படக்கூடாது. நாள்தோறும் கட்சிக்காரர்கள் யாரும் புது பிரச்னையை உருவாக்கியிருக்கக்கூடாது என்ற நினைப்போடுதான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் தூங்கவிடாமலும் செய்கிறது” என அண்மையில் நடந்த பொதுக்குழுவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • vismaya mohanlal introduce as a heroine in thudakkam movie சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!