ஒரே கப்பு தண்ணி… நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோ.. கடுப்பில் திமுக : காரணம் என்ன?!

Author: Udayachandran RadhaKrishnan
2 December 2023, 8:13 pm

ஒரே கப்பு தண்ணி… நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோ.. கடுப்பில் திமுக : காரணம் என்ன?!

சென்னையில் கடந்த 29-ம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக 192 இடங்களில் வெள்ளநீர் தேங்கியது. மேற்கு மாம்பலம், கொரட்டூர், கொளத்தூர் போன்ற பகுதிகளில்வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துபொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

மாநகராட்சி சார்பில் 89 மோட்டார்கள் மூலம் தொடர்ந்து மழைநீர் வடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோல பல பகுதிகளில் வடிகால் பணிகள் துரிதம் எடுத்துள்ளன. கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் 2-வது நாளாக இன்றும் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

அங்குள்ள வாகன சுரங்கப்பாதை முற்றிலும் மூழ்கியதால் கோடம்பாக்கம் பகுதியே தீவு போல் காணப்படுகிறது.சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களிலும் பொளந்து கட்டியது. பல இடங்களில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கியதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகிறார்கள். இதற்குநடுவில், மழைநீர் வடியாமல் இருப்பது, அரசியல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஒருநாள் மழைக்கே இப்படியா? இன்னும் புயல் வேற வந்தால் நிலைமை என்னாவது? என்று விமர்சித்து கொண்டிருக்கிறார்கள்.

அந்தவகையில், பிரபல நடிகையும், அரசியல் விமர்சகரும், சமூக ஆர்வலருமான கஸ்தூரி, ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். நடிகை கஸ்தூரியின் வீடு, தேனாம்பேட்டையில் உள்ளது.. இவரது வீட்டின் முன்பு மழை நீருடன் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.. இதை வீடியோவாக எடுத்து தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “ஆட்சிக்கு வந்ததும் மழைவடிகால்ன்னு எட்டு மாசம் தோண்டி போட்டுருந்தாங்க. தள்ளிக்கிட்டே போச்சு ,மழை வந்துருச்சு. ரோட்டையும் மூடல்லே, வேலையும் முடியல்லே… இப்போ தெரு சாக்கடை ஓவர்ஃப்ளோ ஆகி எங்க வீட்டை சுத்தி கப்பு தண்ணி” என்று பதிவிட்டிருக்கிறார். கஸ்தூரி பதிவிட்ட இந்த வீடியோ “கப்பு தண்ணி”தான், இணையத்தில் பரவி ஓடிக்கொண்டிருக்கிறது..!!

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!