இதுக்கெல்லாம் பயப்படற ஆளு நாங்க இல்ல : பாஜக பிரமுகரின் காரை உடைத்து நொறுக்கிய சம்பவம்.. அண்ணாமலை ட்வீட்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2023, 11:43 am

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துரை கிராமத்தை சேர்ந்த தடா பெரியசாமி என்பவர் பாஜக எஸ்சி அணி மாநில தலைவராக உள்ளார்.

இவர் நேற்றிரவு வழக்கம் போல தனது காரை வீட்டின் முன் நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் அவரது வீட்டுக்குள் நுழைந்நது காரை கற்கள் மற்றும் கட்டையால் அடித்து நொறுக்கியுள்ளனர்.

மேலும் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடினர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தடா பெரியசாமி கட்சி நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மங்கலமேடு காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, SC அணி மாநிலத் தலைவர் திரு தடா பெரியசாமி அவர்கள் வீட்டின் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தி, அவரது வாகனத்தை அடித்து நொறுக்கியுள்ளனர். சமூக விரோதிகளின் இந்தச் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

தடா பெரியசாமி போன்ற உண்மையான சமூக நீதிக்கு உழைக்கும் பாஜக தலைவர்களின் செயல்பாடுகள், போலி சமூக நீதி பேசிக் கொண்டிருப்பவர்களை எந்த அளவுக்கு அச்சுறுத்தியிருக்கிறது என்பது இது போன்ற நிகழ்வுகளில் இருந்து தெரிகிறது.

இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை. ஏழை எளிய மக்களுக்கான எங்கள் பணிகளை, இது போன்ற கோழைத்தனமான செயல்களால் தடுக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!