முன்ஜென்ம தவறுகளால் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்கள் : அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு.. குவியும் கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2024, 9:37 am

சென்னை அசோக நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் ஒரே நேரத்தில் சொற்பொழிவு நிகழ்வுகள் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற அடிப்படையில் மகாவிஷ்ணு என்பவரை சொற்பொழிவு நடத்த அழைத்துள்ளனர்.

தன்னை உணர்ந்த தருணங்கள் என்ற தலைப்பில் அவர் மாணவர்கள் மத்தியில் கருத்துக்களை கூறியுள்ளார்.

உங்களுக்கு யோக தீட்சை தருகிறேன் என தெரிவித்ததோடு மறுபிறவு குறித்து மாணவர்கள் மத்தியில் பேசினார்.

முன்ஜென்ம தவறுகளால் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்கள் என பேசிய மகா விஷ்ணுவின் பேச்சை கேட்ட அங்கிருந்த ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அவர்களுடன் மகா விஷ்ணு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இதையடுத்து அஅரசு பள்ளிகளில் இது போன்ற நிகழ்வுக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் மகா விஷ்ணுவின் கருத்துக்கு கண்டனம் வலுக்கிறது.

இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தது யார்? சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுமதி கொடுத்தாரா? அல்லது தன்னிச்சையாக இவர் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டாரா? என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!