திராவிட மாடல்னு சொல்லி சொல்லி சாராயத்தை கொடுத்து தமிழகத்தை நாசம் பண்ணிட்டாங்க : அன்புமணி ஆவேசம்!
Author: Udayachandran RadhaKrishnan28 January 2024, 4:34 pm
திராவிட மாடல்னு சொல்லி சொல்லி சாராயத்தை கொடுத்து தமிழகத்தை நாசம் பண்ணிட்டாங்க : அன்புமணி ஆவேசம்!
மதுரை விமான நிலைய செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, சமீபத்தில் தமிழகத்தில் இரண்டு பிரச்சனைகள் காவிரி குறுக்கே மேகதாதனையும் முல்லைப் பெரியாறு அணையில் கேரளாவில் ஆளுநர் உரை என்பது முல்லைப் பெரியார் அணைக்கு நிகராக ஒரு புதிய அணையை கட்டுவோம் என்பது ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டிருந்தது கண்டிக்கத்தக்கது.
இப்போது இருக்கும் அணை வலிமையாக உள்ளது என உச்சநீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட குழு ஐந்து முறை உறுதிஅளித்துள்ளது.
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு சட்டமன்றத்தில் ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது என்பது இதெல்லாம் பார்க்கும்போது வேண்டுமென்ற கர்நாடகா தமிழகத்திடம் மோதி கொண்டிருக்கிறது.
தமிழக அரசு ஏமாந்து விடக்கூடாது இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும். அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துவிட்டு ஆட்சிக்கு வந்த பின்பு இப்போது வரை மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது ஒரு சின்ன நடவடிக்கை கூட எடுக்கவில்லை.
ஜாதி வாரி கணக்கெடுப்பில் மற்ற மாநிலங்கள் நடைமுறைப்படுத்தி நலத்திட்டங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறது . தமிழ்நாடு அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது தூங்கிக் கொண்டிருக்கிறதா அல்லது தூங்குவதுபோல் நடிக்கிறதா என்று தெரியவில்லை
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை இருக்கலாம் காரணம் ஒரு பக்கம் மது இன்னொரு பக்கம் கஞ்சா கடந்த மூன்று ஆண்டு காலமாக போதை பொருள் பயன்பாடு 100 மடங்களாக உயர்ந்துள்ளது அமெரிக்காவில் என்ன கிடைக்கிறதோ அத்தனை போதை பொருளும் தமிழ்நாட்டில் சரளமாக கிடைக்கிறது.
தமிழ்நாட்டில் கஞ்சா உடைய தலைநகரம் திருவண்ணாமலை மாவட்டம் அங்கே எங்கு பார்த்தாலும் கஞ்சா அங்கிருக்கும் அமைச்சர் ஏ.வா .வேலு அதை கண்டு கொள்வதில்லை.
தமிழகத்தில் கஞ்சா போதையினால் எல்லா பகுதிகளிலும் வழப்பறி கொலை சம்பவம் நடக்கிறது முதல்வர் அதனை கவனம் செலுத்த வேண்டும்
திராவிட மாடல் என்று சொல்லி சொல்லி சாராயத்தை கொடுத்து கெடுத்து தலைமுறையை நாசப்படுத்தி விட்டீர்கள். டாக்டர்கள் பரிந்துரை கடிதம் இல்லாமல் போதை பொருட்கள் விற்பனை குறித்த கேள்விக்கு, மருந்தகத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் மீறினால் நடவடிக்கை எடுக்க வேண்டும்
முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்த கேள்விக்கு, முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு, இப்போதான் சமீபத்தில் சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது .
கடந்த காலத்தில் 20 லட்சம் கோடி 30 லட்சம்கோடி என்று வாய்க்கு வந்தபடி பேசினார்கள் ஆனால் பார்த்தால் ஒன்றுமே இல்லை.
1700 ஏக்கரில் ஆரணி ஆற்றில் 4ஜி சிட்டி என்ற திட்டத்தை மதுரையில் கொண்டு வாருங்கள் ஏன் எல்லா திட்டத்தையும் சென்னையில் கொண்டு வருகிறீர்கள்.
சென்னையில் இடமில்லை 65% தொழிற்சாலைகள் உள்ளன தென் மாவட்டங்களில் 12 சதவீதம் தான் தொழிற்சாலையில் உள்ளனர்.
சென்னையில் இன்னும் நான்கு மாதத்தில் தண்ணீர் பஞ்சம் வரப்போகிறது.
இதுதான் திராவிட மாடல் ஆட்சி இவர்களிடம் திட்டமிடல் தெரியவில்லை வெள்ளம் வருகிறதா 6000 கொடுத்து விடுவோம் அதிலும் 2000 கமிஷன் ஆண்டாண்டு காலமாக இந்த இரண்டு கட்சிகளும் இதை தான் செய்து வருகிறது
அயோத்தி ராமர் கோவிலை வைத்து பாஜக அரசியல் செய்கிறது குறித்த கேள்விக்கு, அவர்கள் கண்ணோட்டத்தில் சொல்கிறார்கள் அது ஒரு கோவில் விழாவை தான் நான் பார்க்க வேண்டும்
அதிமுக திமுகக்கு மாற்றாக பாமக மூன்றாவது அணி அமைக்குமா குறித்த கேள்விக்கு , இந்த நாடாளுமன்ற தேர்தல் குறித்து எங்களது நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம் இவ்வளவு நாள் பொறுத்துக்கிட்டீங்க இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க
விஜய் கட்சி ஆரம்பித்தால் அவரது கூட்டணியில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, இன்னும் கல்யாணமே ஆகவில்லை அதுக்குள்ள குழந்தைக்கு பேர் வைக்க சொல்கிறீர்கள் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் அரசியலுக்கு வந்து நல்லது செய்யுங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்
பேட்டியின் போது பாமக மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் நடராஜன் மாவட்ட செயலாளர்கள் வீரக்குமார் எஸ் கே தேவர், ராஜா, அழகர்சாமி மற்றும் மாவட்டத் தலைவர் முருகன், பாலமுருகன், மற்றும் கிட்டு, தேவேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
0
0