போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளையே பெட்ரோல் குண்டு வீசறாங்க.. குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்ல : இபிஎஸ் விளாசல்!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2024, 4:28 pm

தமிழகத்தில் தொடர் கொலைகள் நடைபெற்று வருவதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி காவல்நிலையத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையம் மீது மர்மநபர் பெட்ரோல் குண்டு வீசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. “இதை விட மோசமாக சட்டம் ஒழுங்கு சீர்கெட முடியாது” என்று ஒவ்வொரு முறையும் நினைப்பதற்குள் அதனினும் மோசமான ஒரு நிகழ்வு இந்த விடியா திமுக ஆட்சியில் ஏற்படுகிறது.

காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு சட்டத்தின் மீதும், காவல்துறையின் மீதும் குற்றவாளிகளுக்கு துளியும் பயமற்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ளதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனியவேண்டும். மக்கள் பாதுகாப்பு வேண்டி செல்லும் காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பற்ற நிலையிருக்கிறது ,

சீர்கெட்டுள்ள சட்டம் ஒழுங்கைக் காக்க தவறியதால் ,தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறது , சட்டம் ஒழுங்கை காத்திடவும் , தொழில் முதலீட்டை தக்க வைக்கவும் ,உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?