மக்கள் மரண அடி கொடுத்திருக்காங்க… பாஜகவை சுமந்து வரும் அதிமுகவுக்கு திருமாவளவன் திடீர் வலியுறுத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 May 2023, 4:14 pm

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. பா.ஜ.க.வின் ஊழல் ஆட்சியையும், மதவெறி அரசியலையும் மரண அடி கொடுத்து வீழ்த்தியுள்ளனர்.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழர்கள் வாழும் பெங்களூரு பகுதிகளில் பத்து சட்டமன்றத் தொகுதிகளில் வி.சி.க. சார்பில் பிரசாரத்தை மேற்கொண்டோம்.

பிரசாரம் செய்யப்பட்ட 11 தொகுதிகளில் எட்டு தொகுதிகளை காங்கிரஸ் வென்றிருக்கிறது என்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. கர்நாடகாவில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பா.ஜ.க. முற்றிலும் துடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை தூக்கிச் சுமந்து வரும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் இந்தத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், பா.ஜ.க.வுடன் கொண்டுள்ள தங்களது கூட்டணி உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!