ஸ்டெர்லைட் ஆலையில் 20 பேர் கொண்ட உயர்மட்ட குழுவினர் ஆய்வு… விரைவில் தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க திட்டம்..!!

Author: Babu Lakshmanan
18 July 2022, 5:14 pm

தூத்துக்குடி : தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர், செயலர் தலைமையில் உயர் மட்ட குழுவினர் சுமார் 4 மணி நேரம் ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு மூடி சீல் வைத்தனர். இந்நிலையில், நான்கு ஆண்டுகளாக மூடி இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையில் எந்தவித அசம்பாவித சம்பவம் நடந்து விட கூடாது என்பதற்காக சென்னையில் இருந்து வந்துள்ள தமிழக மாசுகட்டுபாட்டு வாரிய செயலர் கண்ணன் தலைமையில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் ரவிச்சந்திரன், துணை இயக்குனர் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் விஜயகுமார் உள்ளிட்ட ஆய்வுக் குழுவினர் மற்றும் மற்றும் வருவாய் துறையினர் காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் மாநகராட்சி பொறியாளர் உள்ளிட்ட உயர் மட்ட குழுவினர் 20 பேர் இன்று காலை ஒன்பது மணிக்கு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஸ்டெர்லைட் ஆலையில் வைக்கப்பட்டுள்ள சிப்சம் வெளியேற்றுவதற்காகவும், மேலும் இயந்திரங்கள் செயல்பாடு குறித்தும் ஆய்வு மேற்கண்டதாக கூறப்படுகிறது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வை முடித்துக்கொண்டு அதிகாரிகள் வெளியேறினர். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டெர்லைட் ஆலையின் மாசுகட்டுப்பாட்டு குழுவானது, ஆய்வு அறிக்கையை தமிழக அரசுக்கு தாக்கல் செய்து உச்சநீதிமன்றத்தில் வழங்கப்படும். மேலும், ஆலையில் உள்ள கெமிக்கல், இயந்திரம் ஆகியவை ஆய்வு மேற்கொண்டோம். அதில் ஆலை 4 வருடம் இயங்காததால் பல இடங்களில் துருப்பிடித்து மோசமான சூழ்நிலையில் இருப்பதாக கூறினார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?