பாதிப்பு குறைந்தாலும் குறையாத பலி எண்ணிக்கை…! தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்..!!

Author: kavin kumar
5 February 2022, 8:21 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் இன்று 7,524 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று 7,524 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது . இதனால் மொத்தம் கொரோனா பாதிப்பு 34,04,762 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 37 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 37,733ஆக உள்ளது.

இன்று ஒரேநாளில் 23,938 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்த 34,04,762 பேரில் இதுவரை 32,28,151 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னை 1,223 பேருக்கும், கோவையில் 1,020 பேருக்கும், செங்கல்பட்டில் 691 பேருக்கும், திருப்பூரில் 609 பேருக்கும், சேலத்தில் 386 பேருக்கும், ஈரோட்டில் 405 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தளவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று சற்று குறைந்தே காணப்படுகிறது.

Views: - 482

0

0