சீட் பெறுவதில் போட்டா போட்டி… திருச்சி காங்கிரஸில் வெடித்த உட்கட்சி பூசல்.. சொந்த கட்சி அலுவலகத்துக்கே பூட்டு போட்ட சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
2 February 2022, 4:39 pm

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசலால் இன்று காங்கிரஸ் கட்சியை அலுவலகத்தை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளே பூட்டு போட்டு பூட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சிச்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கூறுகையில் திமுகவுடன் கூட்டணி வைத்து 10 வார்டுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்காமல், தற்போது திமுக ஒதுக்கியுள்ள நான்கு அல்லது ஐந்து இடங்களில் மட்டும் காங்கிரஸ் போட்டியிட தயாராகி உள்ளது. அதிலும் கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்ட போது, பல லட்சம் ரூபாய் செலவு செய்து காத்துக் கிடந்த நிலையில், இன்று கட்சியில் உள்ள தலைவர்கள் மட்டும் திமுக அருகே உள்ள வார்டுகளில் போட்டியிடுவது கண்டிக்கத்தக்க செயல் என்றும் தெரிவிக்கின்றனர்.

மேலும், தேர்தல் பணி மற்றும் கூட்டணி தொடர்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பேச்சுவார்த்தை குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல் இருக்கும் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜவஹர், அலுவலகத்திற்கு வராமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுகவினர் நாங்கள் வெளியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு ஆதரவு தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே, தற்போது திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த கூச்சல் குழப்பத்தால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அலுவலகத்தை பூட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து மேலும் அங்கு சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று மாலை போட்டியிடும் வார்டு எண்ணிக்கை தொடர்பாக தலைமை ஒன்றுகூடி பேசி முடிவு செய்ய உள்ளனர். இன்று இரவுக்குள் திமுக தருகின்ற 5 வார்டுகளில் காங்கிரஸார் போட்டியிட போகிறார்களா அல்லது திருச்சியில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதா என்பது தெரியவரும்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!