விவாகரத்து வழக்கில் டுவிஸ்ட்.. ‘ஓ மை கடவுளே’ பட பாணியில் கோர்ட்டில் நடந்த சம்பவம்!!
Author: Udayachandran RadhaKrishnan2 அக்டோபர் 2024, 11:24 காலை
விவாகரத்து வழக்கு பற்றி கோர்ட்டில் விசாரணை நடந்த போது ஓ மை கடவுளே பாணியில் கணவர் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.
இன்றைய கால திருமணங்கள் என்பது இன்ஸ்டா போல வாடிக்கையாகி விட்டது. காலையில் கல்யாணம், மாலையில் விவாகரத்து என்பது போல சமூகத்தில் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
சீனாவில் அப்படித்தான் நடந்த சம்பவம் திருமணமான தம்பதிகளை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை சேர்ந்த சென் மற்றும் லீ தம்பதியினர், 20 வருடமாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் தாங்க முடியாத மனைவி, நீதிமன்றத்தை நாடி, என் கணவர் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார், தயவு செய்து விவாகரத்து கொடுங்கள் என கோரியுள்ளார்.
நீதிமன்றத்தில் விவாகரத்து குறித்த விசாரணை நடைபெற்ற போது, கணவன் மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆனால் மனைவி, முடியவே முடியாது என கூறியுள்ளார்,. ஒரு கட்டத்தில் விசாரணை நடக்க நடக்க மனைவியை அலேக்காக தோளில் தூக்கிய கணவர், தனது காரை நோக்கி சென்றார்.
இதை பார்த்த நீதிபதி, மனைவி மீது இவ்வளவு காதலா என கூறிய நீதிபதி, கணவரை அழைத்து இனி சண்டை போட மாட்டேன் என மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு போக உத்தரவிட்டார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓ மை கடவுளே படத்தில் விவகாரத்து கோரிய மனைவியை கிளைமேக்சில் கோர்ட்டுக்குள் வைத்து முத்தம் கொடுத்து மனைவியை கணவன் தூக்கிச் செல்வது போல காட்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0
0