டாஸ்மாக்கில் மது அருந்திய இருவர் மரணம்? கண்துடைப்புக்காக நடத்திய நாடகத்தால் ஏற்பட்ட விளைவு ; அண்ணாமலை கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 June 2023, 9:48 am

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் உள்ள தத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த பட்டறை தொழிலாளிகளான பழனி குருநாதன், பூராசாமி ஆகியோர் நேற்று மாலை மது அருந்தியுள்ளனர்.

சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த இருவரையும், அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், இருவரும் உயிரிழந்துவிட்டனர்.

இதனால், மருத்துவமனையில் உறவினர்கள் குவிந்தனர். 15 நிமிடங்களுக்கு முன்பு வரை நன்றாக பேசிக் கொண்டிருந்தவர், மது குடித்தவுடன் இறந்துவிட்டதாக கூறினர்.

தங்களது குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லை எனவும், மது குடித்ததால் தான் அவர்கள் உயிரிழந்தனர் எனவும் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிராக அண்ணாமலை கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், மயிலாடுதுறை அருகே, டாஸ்மாக் மது அருந்தியதால், மீண்டும் இருவர் மரணம் அடைந்துள்ளதாக நாளிதழில் வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. சாராயத்தால் ஏற்படும் மரணங்களுக்கு ஒவ்வொரு முறையும் புதிய காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லும் தமிழக அரசு, இம்முறை என்ன காரணத்தைச் சொல்லப் போகிறது?

பொதுமக்களின் உயிருக்குச் சிறிதும் மதிப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவுகிறது. குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக, கண்துடைப்புக்காக நடவடிக்கை எடுப்பது போல் நடித்ததன் விளைவு, மீண்டும் இரு உயிர்கள்.

உடனடியாக, சம்பந்தப்பட்ட மது ஆலையை மூட வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் அந்த ஆலையிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ள மது பாட்டில்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், மக்கள் உயிரைப் பற்றிக் கவலையில்லாமல், பத்து ரூபாய் வசூலில் மட்டுமே குறியாக இருக்கும் துறை அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?