மக்கள் நீதி மய்யத்தின் 7வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு… சேலம், தஞ்சை, திண்டுக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
1 February 2022, 2:14 pm
Kamal- Updatenews360
Quick Share

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் 7வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்.19ம் தேதி நடைபெற இருக்கிறது. 22ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், கூட்டணி மற்றும் இடப்பங்கீட்டை அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரளவுக்கு இறுதி செய்து விட்டன. இதையடுத்து, வேட்பாளர் பட்டியலும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகிறது.

இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி, அமமுக, மக்கள் நீதி மய்யம் என பல்முனை போட்டி நிலவுகிறது. அனைத்து கட்சியினரும் பல்வேறு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் 6 கட்டங்களாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 7வது கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது. அதில், சென்னை, விழுப்புரம், நீலகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Views: - 417

0

0