தலையில் பாய்ந்த ஈட்டி; மூளைச் சாவு அடைந்த மாணவன்; பள்ளி பயிற்சியில் நிகழ்ந்த கோர சம்பவம்,..

Author: Sudha
30 July 2024, 11:49 am

வடலூா் தருமசாலை பகுதியைச் சோ்ந்தவா் திருமுருகன் நெய்வேலியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மகன் கிஷோா் வடலூா் சந்தைதோப்பு பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

விளையாட்டில் ஆர்வமுடைய சிறுவன் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று மாநில, மாவட்ட அளவில் பரிசுகள் பெற்று உள்ளார்.கடந்த 24-ஆம் தேதி மாலை பள்ளி வளாகத்தில் கோ கோ பயிற்சியில் ஈடுபட்டு இருந்த கிஷோரின் தலையில், ஈட்டி எறிதல் பயிற்சியில் இருந்த மற்றொரு மாணவன் எறிந்த ஈட்டி பாய்ந்தது.

இதில் சிறுவன் கிஷோர் பலத்த காயமடைந்தாா். அவரை ஆசிரியர்கள் பெற்றோர் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த சிறுவன் கிஷோா் நேற்று மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன் கிஷோரின் தந்தை திருமுருகன், வடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், மாணவன் கிஷோர் பயின்று வந்த தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விசாரணையில் மாற்று ஆசிரியர் உடற்கல்வி ஆசிரியராக செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?