கதையல்ல நிஜம்; வயநாடு நிலச்சரிவு ஓராண்டு முன்பே கதையாய் எழுதிய மாணவி: மனம் தொட்ட நிகழ்வு…!!

Author: Sudha
3 August 2024, 5:07 pm

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. பலநூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர். மேப்பாடி அருகே மலைப்பகுதிகளில் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், மலப்புரம், நீலம்பூர் பகுதிக்குப் பாயும் சாலியாறு ஆற்றில் பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 350-ஐ கடந்துள்ளது.மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்புப்பணிகளில் இராணுவமும் பொது மக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வயநாட்டைச் சேர்ந்த சிறுமி கடந்தாண்டு எழுதிய சிறுகதை ஒன்றில் வரும் இயற்கை பேரிடர் அப்படியே நிகழ்ந்துள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

வயநாட்டில் சூரல்மலை பகுதியில் உள்ள வெலர்மலா அரசு மேல்நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் லயா என்ற சிறுமி கடந்தாண்டு பள்ளி இதழுக்காக சிறுகதை ஒன்றை எழுதியுள்ளார். அதில் நீர்வீழ்ச்சி ஒன்றில் மூழ்கிய சிறுமி ஒருவர் பறவையாக திரும்பி வந்து, நீர் நிலைகளுக்கு அருகில் சென்றால் ஏற்படும் ஆபத்து குறித்து தன் கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.அதன் மூலம் 2 குழந்தைகள் காப்பாற்றப் படுகிறார்கள்.

தனக்கு நேர்ந்த சோக முடிவு மற்ற எந்த குழந்தைகளுக்கும் நேர்ந்து விடக் கூடாது என எச்சரிப்பதற்காக அந்தப் பெண் திரும்பி வந்ததாகக் கதையில் கூறப்பட்டுள்ளது.அந்த கதையில் வரும் இயற்கைச் சீற்றம் போல் தற்போது வெலர்மலா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஊரே தரைமட்டமானது.

இந்த நிலச்சரிவில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தக் கதையை எழுதிய மாணவி லயாவின் தந்தை லெனினும் உயிரிழந்துள்ளார். அதுமட்டுமல்லாது வெலர்மலாவில் உள்ள அரசுப் பள்ளியில் படித்த 497 மாணவர்களில் 32 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மக்கள் சிறுமியின் கணிப்பு குறித்து ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

  • wine party right after the wedding... Netizens shower Priyanka திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!