திமுக தான் எதிர்க்கட்சி-னு நினைச்சிட்டாரு போல… இங்கேயே டேரா போட்ட பிரதமர் மோடி ; திருமாவளவன் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
16 April 2024, 11:53 am
Quick Share

காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக திமுக தான் எதிர்க்கட்சி என்பது போல தமிழ்நாட்டிலேயை டேரா போட்டு பிரச்சாரம் செய்கிறார் மோடி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் இன்று பு.முட்லூர் பகுதியில் வாக்குசேகரிப்பை தொடங்கினார்.

மேலும் படிக்க: ’70 பேரை கூப்பிட்டு வந்தேன்.. 40 டோக்கன் தான் இருக்கு’..? திமுக கூட்டத்தில் நிர்வாகியிடம் பெண் வாக்குவாதம்..!!

மக்களிடம் திருமாவளவன் பேசியதாவது:- இன்றும், நாளையும் மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட முடியும். இன்னும் சந்திக்க வேண்டிய கிராமங்கள் நிறைய உள்ளன. இந்த தேர்தல் வழக்கமான தேர்தல்ல. நரேந்திர மோடியின் நாசகரமான ஆட்சியை வீழ்த்த தளபதி முக ஸ்டாலினும், ராகுல் காந்தியும் வியூகம் அமைத்து களமாடி வருகின்றனர்.

பாஜகவிற்கு எதிரான வியூகம் அமைத்து, பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைந்து இன்று வலுவான தேர்தல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். மழை வெள்ளத்தில் தமிழ்நாட்டிற்கு வராத மோடி, தேர்தல் வந்தவுடன் பத்து முறை வந்துள்ளார். காங்கிரஸுக்கு பதிலாக திமுக தான் தனது எதிர்க்கட்சி என்பது போல தமிழ்நாட்டிலேயே டேரா போட்டு தங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்.

ராகுல், மு.க.ஸ்டாலினால் தான் மோடியை வீழ்த்த முடியும். 40 தொகுதியிலும் மு‌க ஸ்டாலின் தான் வேட்பாளராக இருக்கிறார். எனவே என்னை வெற்றி பெற செய்வதைவிட மு.க.ஸ்டாலினின் வியூகத்தை வெற்றி பெற செய்யுங்கள். கேஸ் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, சாதிய மோதல்கள் அதிகரிக்கவும் மோடி தான் காரணம், எனக் கூறினார்.

Views: - 348

0

0