அண்ணாமலைக்கு இருப்பது ஒரு ‘மேனியா’.. நடைபயணம் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது : திருமாவளவன் கடும் விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
16 August 2023, 11:29 am
Quick Share

பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவன் மற்றும் அவனது தங்கையை சக மாணவர்கள் அரிவாளால் தாக்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இம்மாணவனை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நேரில் சென்று நலம் விசாரிப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி எம்.பியுமான தொல் திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையம் வந்தடைந்தார்.

பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- இந்தியா கூட்டணி அமைந்ததில் இருந்து பாஜகவினருக்கு அடி வயிற்றில் புலி கரைக்கிறது. பிரதமர் பயந்து போய் இருக்கிறார். எதிர் கட்சிகள் ஒன்று சேரும் என கனவில் கூட நினைத்து இருக்க மாட்டார். அதற்கு வாய்ப்பு இல்லை என்ற என்னத்தோடு இருந்தவருக்கு அனைத்து எதிர்கட்சியும் சேர்ந்து இந்தியா என்ற கூட்டணி அமைத்தது காலத்தின் தேவையாக இருக்கிறது. இந்த கூட்டணி உருவான நாளில் இருந்து பாஜக, ஆர்எஸ்எஸ் வாய்க்கு வந்த படி பிதற்றி கொண்டு இருக்கிறார்கள். ஏது பேசினாலும் எதிர்க்கட்சிகளை வசைப்பாடி கொண்டு இருக்கிறார் பிரதமர்.

2.15 மணி நேரம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பதிலளித்து பேசினார் பிரதமர். அவர் என்ன பேசினார் என ஆங்கில நாளிதழ் கிண்டலடித்து பேசியது, பிலா, பிலா, பிலா, பிலா என முழுக்க அத்தனை காலத்திலும் கிண்டலடித்து இருந்தது. ஒரு பிரதமரை இந்த அளவுக்கு எந்த ஊடகமும் நாட்டில் கேலி செய்து இருக்க முடியாது. அவர் நாடாளுமன்ற அவையில் பேசியது ஏதும் இல்லை என ஊடகம் கேலி செய்யும் நிலைக்கு பிரதமர் உள்ளார். அவர் நாட்கள் எண்ணப்பட்டு கொண்டு இருக்கிறது. மேலும், எந்த இந்து மக்களின் ஒட்டு வங்கியை நம்பி இருந்தாரோ, அதே இந்து மக்கள் விரட்டி அடிக்க போகிறார்கள்.

நாங்குநேரி சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. ஜனநாயகம் தலைகுனிவு, பள்ளி சிறுவர்கள், கல்லுரி மாணவர், கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். ஜாதி, மத நச்சு கருத்துகளை பரப்பி வருகின்றனர். வழக்கறிஞர் சந்துரு தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களில் நிலவுகிற பிரச்சினை, பாகுபாடு குறித்து விரிவாக வழிகாட்டு தர வேண்டும், எனக் கூறினார்.

அண்ணாமலை நடைபயணம் குறித்து பேசுகையில், ஊடகம் நம் பக்கம் இருக்க வேண்டும் என பேசி கொண்டு இருக்கிறார். தம்மை பற்றி பேச வேண்டும், விளம்பர உளவியவியலுக்கு ஆளாகி உள்ளார். அது ஒரு மேனியா என்று தான் சொல்ல வேண்டும். இந்த நடைபயணம் எந்த தாகத்தையும் ஏற்படுத்தாது, என்றார்.

திருச்செந்தூர் அமலி நகர் மீனவ பிரச்சனை குறித்து பேசுகையில், மீனவ சமூக மக்கள் கோரிக்கை கனிவோடு பரிசளிக்க வேண்டும். நிறைவேற்ற முன் வர வேண்டும் என்றார்.

Views: - 243

0

0