திட்டமிட்டே சட்டசபைக்கு வந்த ஆளுநர் ஆர்என் ரவி… இனி தமிழகத்தில் இருக்கவே கூடாது ; திருமாவளவன் ஆவேசம்..!!

Author: Babu Lakshmanan
13 February 2024, 8:30 am

ஆளுநர் பதவியில் இருந்து ஆர்என் ரவியை நீக்குவதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைக் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் திராவிட கழக முன்னேற்ற கழகத்தின் தலைமையில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி டி ஆர் பாலு தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவிடம் போட்டியிட விரும்பும் விருப்ப பட்டியலை கொடுத்துள்ளோம்

விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளன. நான்கு தொகுதிகளை போட்டியிட கேட்டுள்ளோம். அகில இந்திய அளவில் தொடர்ந்து திமுக தலைமையிலான கூட்டணி தான் அதிக தேர்தல்களை சந்தித்துள்ளது. அவ்வாறு கொள்கை சார்ந்து இயங்கும் கூட்டணியாக இந்த கூட்டணி அமைந்துள்ளது. மேலும் இது இந்திய கூட்டணியாக வலுவடைந்துள்ளது.

அகில இந்திய அளவில் பாரதிய ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை செயல்திட்டத்துடன் இந்தியா கூட்டணி இயங்கி வருகிறது. இந்தியா கூட்டணியில் அங்கம் வைக்கும் திமுக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு தனி தொகுதிகளை குறிப்பிட்டு அதில் மூன்று தொகுதிகள் வேண்டும் என்றும், பொது தொகுதிகளில் பெரம்பலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய பொதுத் தொகுதிகளில் ஏதேனும் ஒன்று வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

தொகுதி இறுதி செய்த பின்னர் போட்டியிடும் சின்னம் குறித்து அறிவிக்கப்படும். சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட முறை வேதனை அளிக்கிறது. அரசிற்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற முன் சிந்தனையோடு ஆளுநர் வந்துள்ளார்.

ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் ஆளுநராக செயல்படவில்லை. ஆர்எஸ்எஸ் தொண்டராக செயல்பட்டு வருகிறார். எனவே அவர் ஆளுநர் பதவியில் நீடிக்க கூடாது. அவரை நீக்குவதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைக் கட்சி வேண்டுகோள் விடுகிறது, என தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!