‘Naan Ready… Varava…. நீ வா தலைவா’… மதுரையைத் தொடர்ந்து கோவையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் வைரல்..!!!

Author: Babu Lakshmanan
21 June 2023, 11:55 am

கோவை நகரில் பல்வேறு பகுதிகளில் விஜய் ரசிகர் மன்றத்தினர் “நீ வா தலைவா, இலவச கல்வி தா தலைவா” என்ற வாசகங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.

நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தினர் சமீபகாலமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை அழைத்து, அவர்களை பாராட்டி கல்வி உதவித் தொகையை வழங்கினார். இந்த விழாவில் அவர் பேசிய பேச்சுக்கள், அடுத்த ஆண்டு நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து விடுவாரோ..? என்று அவரது ரசிகர்களிடையே எழச் செய்துள்ளது.

Vijay - Updatenews360

இதையடுத்து, 2026ல் முதல்வரே எனக் கூறி நடிகர் விஜய்யை அரசியலில் தொடர்புபடுத்தி, மதுரையில் அவரது ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் வைரலானது.

இதனிடையே, நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இந்த சுவரொட்டிகள் கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் அந்த ரசிகர் மன்றத்தினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். கோவை மாவட்ட தலைமை மாணவரணி சார்பில் மாநகர் முழுவதும், ‘நீ வா தலைவா, இலவச கல்வி தா தலைவா,’ என்ற வாசகங்களுடன் நகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • murali love actress sivaranjani but she did not accept him மது போதையில் அத்துமீறல்? திருமணம் ஆன பின்பும் நடிகையை காதலித்த முரளி! அடக்கொடுமையே?