களம் 8ல் திமுகவ போட்டு பொளந்துட்டாரு – முதல் மாநாட்டிலே வெற்றிகண்ட விஜய்!

Author:
27 October 2024, 8:05 pm

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு கலை நிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்கியது. மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த மாநாட்டில் விஜய் எதிர்பார்த்ததை விட மிக சிறப்பான சிறப்புரையாற்றி எல்லோருக்கும் கட்சி மீதான நம்பிக்கையை வர வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் .

vijay

தன்னுடைய கட்சி வழிகாட்டியாக பெரியார் , அம்பேத்கர் , காமராஜர் , அஞ்சலை அம்மாள் , வேலு நாச்சியார் ஆகியோரை ஏற்றுள்ளது என விஜய் கம்பீரக் குரலோடு உரையாற்றினார். மேலும் திருவள்ளுவர் கூறிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படையில் சாதி, மதம், பேதம், இனம் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரும் சமம் என்ற கொள்கையோடு என்னுடைய கட்சி செயல்படும் என உரக்க கூறினார் .

இந்த மாநாட்டில் பல விஷயங்களை மிகவும் தைரியமாக ஆக்ரோஷத்தோடு பேசிய விஜய் எல்லா வழிகளிலும் யோசித்து தான் நான் அரசியல் களத்தில் அடி எடுத்து வைத்திருக்கிறேன் என்று கூறினார். மேலும் இந்த கொள்கையை அறிவிப்பதற்காக கொள்கை அறிவிப்பை தமிழக வெற்றி கழகத்தின் எதிரிகளை அடையாளம் காட்டும் அவர்களாக வந்து அம்பலப்படுவார்கள் என்று உரக்க கூறினார்.

ஊழலை ஒழிக்கவே தமிழக வெற்றி கழகம் பாடுபடும்… பிளவுவாத அரசியல் வெளிப்படையாக தெரிந்த ஒன்று…. மதம் பிடித்த யானை அது கண்ணுக்குத் தெரிந்த ஒரு எதிரி…. இன்னொரு எதிரி யார் என்றால் ஊழல் செய்து கொண்டு முகமூடி அணிந்திருக்கும் கபடதாரிகள் அவர்களுக்கு முகமே முகமூடி தான் அவர்களையும் அடித்து வீழ்த்துவோம் இந்த இந்த தமிழக வெற்றி கழகம் என விஜய் மிகுந்த ஆக்ரோஷத்தோடு பேசி இருந்தார்.

vijay

தமிழ்நாட்டில் இருக்கும் மற்ற கட்சிகளைப் போல் பத்தோடு பதினொன்றாக நம்முடைய கட்சி இருக்காது உண்மையான மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவிக்கும் என பேசி இருந்தார். மேலும், இந்த பேச்சு உண்மையான மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவிக்கும் என பேசி இருந்தார் .

மேலும் இந்த பேச்சில் பாஜக ,அதிமுக ,நாதக, திமுக என எல்லா கட்சிகளையும் நேரடியாகவே தாக்கி பேசி விட்டார் விஜய் நடிகர். விஜய்யின் அரசியல் பேச்சு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. தன்னுடைய அரசியல் வருகையின் முதல் மாநாட்டு பேச்சிலே நடிகர் விஜய் தன்னுடைய எதிரிகளாக ஆளும் அரசியல் கட்சி என தைரியமாக பேசி இருப்பது அவரின் அரசியல் வருகை மீதான நம்பிக்கையை மக்களுக்கு மேலும் அதிகரித்திருக்கிறது.

  • sridevi mother did not accept that sridevi to marry rajinikanth ரஜினிகாந்தின் காதலை குழி தோண்டி புதைத்த ஸ்ரீதேவியின் தாயார்- அடப்பாவமே!