பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் தேர்தல் விதி மீறல்.. பள்ளிச் சீருடையில் வந்த மாணவிகள் : விசாரணைக்கு பரிந்துரை!!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2024, 10:55 am

பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் தேர்தல் விதி மீறல்.. பள்ளிச் சீருடையில் வந்த மாணவிகள் : விசாரணைக்கு பரிந்துரை!!

கோவையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. சாய்பாபா கோவில் பகுதியில் துவங்கிய இந்த நிகழ்ச்சியானது ஆர் எஸ் புரம் பகுதியில் நிறைவடைந்தது.

பிரதமர் வரும் வழிகளில் பாஜக தொண்டர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் சாலையின் இரு புறங்களில் நின்று ஆர்ப்பரித்தனர். பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இந்நிலையில் சாய்பாபா காலனி பகுதியில் பிரதமர் மோடியை வரவேற்க அரசு பள்ளி மாணவர்கள் சீருடையுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தொழிலாளர் துறை இணை ஆணையர் ஆகியோரிடம் அறிக்கை கேட்கப்பட்டு இருப்பதாகவும் விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!