எல்லா இடத்திலும் தண்ணீர்… கேவலமா இருக்கு.. எதுக்கு வரி கட்டுகிறோம் என கேட்க வைத்து விடாதீர்கள் : திமுக அரசு மீது நடிகர் விஷால் காட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
4 December 2023, 9:33 pm

எல்லா இடத்திலும் தண்ணீர். கேவலமா இருக்கு.. எதுக்கு வரி கட்டுகிறோம் என கேட்க வைத்து விடாதீர்கள் : திமுக அரசு மீது நடிகர் விஷால் காட்டம்!

சென்னையில் கனமழை கொட்டி வரும் நிலையில்,வெள்ளம் சூழ்ந்து தனித்தீவாகவே காட்சியளிக்கிறது. இந்த நிலையில சென்னை முழுவதும் தண்ணீர் சூழ்ந்து மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இது குறித்து நடிகர் விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில், சென்னை மாநகராட்சிக்கும் மேயர் பிரியாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அதில், புயல் மழையால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்ழுடும், பின்னர் தண்ணீர் வீட்டுக்குள் நுழைந்துவிடும் என்பது வழக்கமான விஷயம். அதே போல அண்ணா நகரில் இருக்கும் என்னுடைய வீட்டில் தண்ணீர் நுழைந்துவிட்டது.

அண்ணா நகரிலேயே இந்த கதி என்றால் மற்ற இடங்களை யோசித்து பாருங்கள். 2015ஆம் ஆண்டு நடக்கும் போது எல்லோரும் இறங்கி வேலை செய்தோம், முடிந்த அளவுக்கு பொதுமக்களுக்கு சேவை செய்தோம். 8 வருடம் கழித்து அதைவிட மோசமாக நடப்பது கேள்விக்குறியாக உள்ளது.

மழைநீர் சேமிப்பு வடிகால் தொடர்பான சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன ஆனது என்பது தெரியவில்லை,. நான் ஒரு வாக்காளர் என்ற முறையில் இதை கேட்டுக் கொள்கிறேன்,.சென்னை தொகுதி எம்எல்ஏக்கள் தயவு செய்து வெளியில் வந்து சரி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

என் வீட்டில் இருக்கும் சீனியர் சிட்டிசன்கள், என் அம்மா அப்பா அச்சத்தில் உள்ளனர். எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கியிருப்பது தர்மசங்கடமான கேவலமான விஷயமாக பார்க்கிறேன்,. உடனடியாக இதை சரி செய்ய மாநகரட்சி முன்வர வேண்டும். எதற்காக வரி கட்டுகிறோம் என கேட்க வைத்துவிடாதீர்கள் வந்து உதவுங்கள் என காட்டமாக பேசியுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!