தொகுதிப் பங்கீடு பேச்சுவார்தைக்கு நாங்க ரெடி… காங்கிரஸ் கட்சிக்கு தேதி குறித்த திமுக..!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 January 2024, 10:30 am

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்தைக்கு நாங்க ரெடி… காங்கிரஸ் கட்சிக்கு தேதி குறித்த திமுக..!!!

நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு கட்சியும் கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த மற்றும் தேர்தல் அறிக்கைகள் தயாரிக்க குழு அமைத்து வருகின்றனர்.

அந்த வகையில் திமுக, அதிமுக, மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் தங்களின் தொகுதி பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை திமுக வேகப்படுத்தி உள்ள நிலையில் வரும் 28-ம் தேதி காங்கிரஸ் உடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் காங்கிரஸ் இடையே வரும் ஜனவரி 28-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஜனவரி 28-ம் தேதி மாலை 3 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா அறிவாலத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் 8 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு தலைமையிலான குழு காங்கிரஸ் கமிட்டி குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை குறித்து 28-ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக திமுக தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை தொடங்குகிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை கனிமொழி எம்.பி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டி.கே.எஸ்.இளங்கோவன், பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ. எழிலன், மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்த்தக்கது

  • wine party right after the wedding... Netizens shower Priyanka திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!