இரட்டை இலையை முடக்க பாஜக உடன் கூட்டுச் சதி செய்த ஓபிஎஸ்க்கு என்ன உரிமை இருக்கு? கே.பி முனுசாமி காட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
6 June 2024, 12:32 pm

மக்களைவ தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. ஆளும்கட்சியான திமுக 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதற்கு அதிமுக தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி, ஓபிஎஸ் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

அதிமுக பல்வேறு சோதனைகளை சந்தித்தபோது அதற்கு முக்கிய கருவியாக இருந்து அதிமுகவிற்கு மேலும் மேலும் சோதனைகளை கொடுத்தவர் ஓ பன்னீர்செல்வம்.

அதிமுக தொண்டர்கள் கோயிலாக வணங்கும் அதிமுக தலைமை கழக அலுவலகத்தை குண்டர்கள் உதவியோடு சூறையாடிச் சென்றவர் ஓ பன்னீர்செல்வம்.

அதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களை கடுமையாக விமர்சித்த அண்ணாமலையோடு கைகோர்த்துக்கொண்டு தன் சுயநலத்திற்காக அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர் தான் ஓ பன்னீர்செல்வம்.

அதிமுக கட்சி முடக்க முயற்சித்த ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு அனைவரும் ஒன்றிணைவோம் வா என அழைப்பு விடுப்பதற்கு எந்த ஒரு அருகதையும் இல்லை.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!