8 வழிச்சாலை திட்டத்தை நாங்க எப்ப எதிர்த்தோம்…. பொதுமக்களிடம் பேசுங்கனு தான் சொன்னோம் : திமுக அமைச்சர் திடீர் பல்டி!!

Author: Udayachandran RadhaKrishnan
31 August 2022, 3:28 pm
Minister EV Velu - Updatenews360
Quick Share

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக அரசாங்கம் தான் முடிவு எடுக்க முடியும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

மதுரையில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. அதனை பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் பத்திரப்பதிவுதுறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்பு அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக கடந்த ஆட்சியின் போது விவசாயிகளை, பொதுமக்களை நேரில் அழைத்துப் பேசவேண்டும், குறைகளைத்தீர்க்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் எடுத்துக் கூறினோம்.

கடந்த ஆட்சியில் எட்டுவழிச்சாலை தொடர்பாக சட்டமன்றத்தில் பேசும் போது பிரச்சினைகளை பேசி தீர்க்க வேண்டும் என்று தான்பேசினோம். நாங்கள் திட்டத்தை எதிர்க்கவில்லை.

சட்டமன்றத்தில் எட்டுவழிச்சாலை திட்டத்தில் பொதுமக்களுக்கு பிரச்சினைகள் உள்ளது விவசாயிகள் அழைத்து பேசுங்கள் என்றுதான் சொன்னோம். அது சட்டமன்ற குறிப்பில் உள்ளது.

எட்டு வழி சாலை விவகாரம் என்பது ஒரு கொள்கை முடிவு. அதுபற்றி அமைச்சர் முடிவு எடுக்க முடியாது, அரசாங்கம் தான் முடிவு எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 391

0

0