கல்யாணம் யாருக்கு? ராகுல் காந்தி படத்துடன் அழைப்பிதழ் கொடுத்த காங்., தலைவரால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2023, 5:57 pm

கல்யாணம் யாருக்கு? ராகுல் காந்தி படத்துடன் அழைப்பிதழ் கொடுத்த காங்., தலைவரால் பரபரப்பு!!

கே. எஸ். அழகிரியின் மகள் காஞ்சனா அழகிரியின் திருமணத்தை முன்னிட்டு அச்சிடப்பட்டுள்ள 4 பக்க அழைப்பிதழில், ‘அன்புடன் அழைக்கிறோம்’ என்ற வாசகத்துடன் 52 வயதான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் படம் முதல் பக்கத்திலேயே இடம்பெற்றுள்ளது.

அதற்குக் கீழே கே. எஸ். அழகிரியின் படம் சிறிய அளவில் உள்ளது.
இரண்டாவது பக்கத்தில் சிரித்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் முழுப் புகைப்படம் உள்ளது.

மூன்றாவது பக்கத்தில் ராகுல் காந்தியின் தாயார் சோனியா காந்தியின் படம் இருக்கிறது. கடைசிப் பக்கத்தில் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் படம் இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் மகள் காஞ்சனா அழகிரி வினோத் ரங்கநாத் என்பவரை மணக்கிறார். சென்னை திருவான்மியூரில் உள்ள அருள்மிகு மருந்தீஸ்வரர் திருமண மண்டபத்தில் ஏப்ரல் 25ஆம் தேதி (நாளை) திருமணம் நடக்க உள்ளது. மாலை 7 மணிக்கு மாண்டலின் இசைக்கலைஞர் யூ. ராஜேஷ் குழுவினரின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?