தமிழன் ஏன் இந்தியாவுக்கு தலைமை தாங்கக் கூடாது : இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் கமல் பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
2 June 2024, 1:21 pm

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளியான படம் இந்தியன். தந்தை, மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார்.

லஞ்சத்தை எதிர்த்து போராடும் இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசனின் கதாபாத்திரம் மிகவும் பேசப்படும் வகையில் அமைந்ததுடன் படம் பெரிய வெற்றியை பெற்றது. 28 வருடங்களுக்கு பிறகு இந்தியன் படத்தின் 2-ம் பாகம் ஷங்கர் இயக்கத்தில் தற்போது தயாராகி வருகிறது. படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து ஜூலை 12-ந்தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.

இதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவில் கமல்ஹாசன், ரகுல் பிரத் சிங், காஜல் அகர்வால், தம்பி ராமையா, இயக்குனர்கள் சங்கர், நெல்சன், லோகேஷ் கனகராஜ் மற்றும் பாபிசிம்கா உள்பட பலர் பங்கேற்றனர்.

நான் தமிழன், நான் இந்தியன் என்பது எனது அடையாளம். இங்கு பிரிச்சு விளையாடனும்னு யாராவது நினைச்சா அது இந்தியாவில் நடக்காது. நாம் எப்போதும் வந்தாரை வாழ வைப்போம். தமிழனுக்கு எப்போதும் அமைதி காக்க வேண்டும் என்று தெரியும்.

எங்கே இருக்க வேண்டும் என்று தெரியும். தமிழன் ஏன் இந்தியாவுக்கு தலைமை தாங்கக் கூடாது என்பதே என் எண்ணம். பொதுவாக எனக்கு இரண்டாம் பாகம் என்றால் ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் என்ன எதிர்பார்த்து வரவேண்டும் என்று மக்களுக்கு தெரியும். எக்கச் சக்க சோதனைகளை கடந்து இங்கு வந்து நிக்குறதுல எனக்கு சந்தோசம். இந்தியன் ஒரு பெரிய கதை. படம் மொத்தம் 3 பாகங்கள். இதே போன்று ஒரு படத்தை நான் சிவாஜியை வைத்து இயக்க நினைத்தேன்.

அவர்தான் என்னை இந்தியன் படத்தில் அப்பா-மகன் என இரு கதாபாத்திரங்களில் நடிக்க சொன்னார். அவள் ஒரு தொடர் கதை படத்தில் என் சம்பளம் ரூ.2 ஆயிரம். படத்தின் பட்ஜெட் 4 லட்சம் ான் இப்போது தனி நபர் வருமானம் ஏறிவிட்டது. விலைவாசியும் உயர்ந்து விட்டது.

இசை வெளியீட்டு விழாவிற்கு ஆன செலவு நான் நடித்த பல படங்களின் பட்ஜெட்டை காட்டிலும் அதிகம். மகள் ஸ்ருதி மனசு வச்சிருந்தா நான் இப்போது தாத்தாதான். பிரமாண்டத்துக்கு உதாரணமே ஷங்கர் தான். உதயநிதி ஸ்டாலின் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளார். அவருக்கு நான் உறுதுணையாக இருப்பேன் என பேசினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!