திமுக அரசின் அராஜகத்தால் தேர்தல் சுதந்திரமா நடக்குமா? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இருந்து அதிமுக அவுட்!

Author: Udayachandran RadhaKrishnan
15 June 2024, 5:04 pm

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான, அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வந்தார்.இதுதொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்தது.

இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கிடையே, திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆலோசனை கூட்டத்தின் முடிவில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

குறிப்பாக ஆளும் திமுக அரசின் அராஜகங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பண பலம், படை பலம் காரணமாக புறக்கணிப்பதாகவு தெரிவித்துள்ளது.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதால் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம். மக்களவைத் தேர்தலில் பல்வேறு அராஜகங்களை செய்து திமுக வெற்றிப் பெற்றதாக அதிமுக விமர்சித்துள்ளது. நடைபெறும் தேர்தல் சுதந்திரமாக நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அதிமுக கூறியுள்ளது.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!