பெண்கள் அச்சமின்றி வாழ முடியாத சூழல்.. திராவிட மாடல் ஆட்சியில் எல்லாமே ஊழல் : இபிஎஸ் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 June 2023, 9:12 pm
EPS -Updatenews360
Quick Share

சேலம் எடப்பாடியில் அதிமுக கொடியேற்றுவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது, தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப்பொருட்களால் ஏற்படும் பிரச்சனைகள் உள்ளிட்டவைகள் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் பெண்கள் அச்சமின்றி வாழமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் வளர்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில் இயங்கும் 5 ஆயிரத்து 800 மதுபான பார்களில் 4 ஆயிரம் பார்களுக்கு அனுமதியில்லை.

தமிழகத்தில் அனுமதியில்லாத மதுபான பார்கள் மூலம் ரூ.20 ஆயிரம் கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

Views: - 146

0

0