மண்டு… நீ வெறும் BRANCH MANAGER.. 24ஆம் தேதி வரை தான் உனக்கு கெடு : எஸ்வி சேகர் ட்வீட்டால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2023, 4:29 pm
Sve Sekar - Updatenews360
Quick Share

அதிமுக – பாஜக இடையே கருத்து மோதல் நிலவி வரும் சூழலில் நேற்று அண்ணாமலை பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பேசியதாவது :- தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். பிரதமர் மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளேன். கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் வருகிற மே மாதம் 10-ந்தேதி வரை கட்சி பணிகளில் ‘பிஸி’யாக இருப்பேன், எனக் கூறினார்.

அவரது இந்தப் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்த துணை தலைவர் நாராயணன் திருப்பதி, உங்களுடைய (அண்ணாமலை) பேச்சு தெளிவாக இல்லை. அதனால் விளக்கமாக கூறுங்கள் என்றார். இதற்கு பல்வேறு தரப்பினர் ஆட்சேபணை தெரிவித்தனர். மேலும், அண்ணாமலையின் கருத்துக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர், பேசிய கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், கட்சியின் மைய குழுவில் பேசவேண்டிய கருத்தை ஏன் இப்போது பேசுகிறீர்கள்? என்று கேட்டார். இதற்கும் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்த சம்பவங்கள் நடப்பதற்கு முன்பே பாஜக நிர்வாகியும் நடிகருமான எஸ்.வி.சேகர் ஒரு பூடகமான ட்வீட்டை போட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், தம்பி ஆபீஸ் போகலியா 🥸எதுத்த வீட்டு பையன் பக்கத்து வீட்டு பையன் ஆபீஸ் போறாங்களா? நானும் வீட்டுலயே வேலை செய்வேன்.

🥹அட மண்டு அவங்க கம்பெனி முதலாளி. நீ வெறும் பிரான்ச் மேனேஜர் 24 வரைக்கும் உன்னை வேலயில வச்சிருப்பாங்களான்னே தெரியலை.

இனிமே பழைய வேலைக்கும் போகமுடியாது. கிளம்பு.. என கூறியிருக்கிறார். அதாவது யார் பெயரையும் குறிப்பிடாமல் போட்டுள்ள இந்த ட்வீட் அண்ணாமலையை குறிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவர்தான் நான் மேனேஜர் இல்லை என்றார், இதற்கு முன்பு பணியாற்றிய ஐபிஎஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டார். எனவே அண்ணாமலையை எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Views: - 51

0

0