முதல்வரே சந்தி சிரிக்குது உங்க நிர்வாகம்.. இதுல பாஜகவை முடக்குவதே உங்கள் குறி.. அண்ணாமலை கண்டனம்!
Author: Udayachandran RadhaKrishnan4 August 2024, 12:43 pm
வடசென்னை மேற்கு பாஜக மாவட்டத் தலைவர் முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது X தளப்பதிவில், வடசென்னை மேற்கு பாஜக மாவட்டத் தலைவர் திரு. கபிலன் அவர்களைத் தமிழகக் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதற்காக அவரைக் கைது செய்திருப்பதாகத் தெரிகிறது. திமுக அரசின் இந்த பாசிசப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, தினம் கொலைகளும், கொள்ளைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கையில், திமுக தனது அரசியலுக்குக் காவல்துறையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
பொதுமக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்க இயலாத முதலமைச்சர், பாஜகவினரை முடக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்.
இது போன்ற அடக்குமுறைகளால், திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியையோ, முதலமைச்சர் ஸ்டாலினின் கையாலாகாத்தனத்தையோ மறைக்க முடியாது. பாஜகவினர் மீதான இதுபோன்ற அடக்குமுறைகளைக் கைவிட்டு, மாநில அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கைக் கவனியுங்கள் முதலமைச்சரே. சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது உங்கள் நிர்வாகம் என பதிவிட்டுள்ளார்.
0
0